மலேசிய விமானி ஷாவுக்கு விமானம் புறப்பட சில நிமிடங்களுக்கு முன்னர் வந்த தொலைபேசி அழைப்பு!!

308


Malaysia flight

239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானம் என்ன ஆனது என்பது 2 வார காலத்துக்கும் மேலாக மர்மமாக நீடித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் மலேசிய விமானம் பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.



இந்தநிலையில் மலேசியா பொலிசாருக்கு புறம்பாக புலனாய்வில் இறங்கியுள்ள F.B.I விசாரணைகளை முழுவீச்சில் தொடங்கியுள்ளது விமானி ஷாவுக்கு விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் இரண்டு நிமிட தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை மேற்கொண்ட சிம் போலியாக ஒரு பெண்ணின் அடையாளத்தை பயன்படுத்தி சம்பவம் இடம்பெற்ற சில தினங்களுக்கு முன்னர் பெறப்பட்டுள்ளது .போலியாக பெறப்பட்ட சிம்மில் இருந்து விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் இரண்டு நிமிட அழைப்பு விமானிக்கு ஏன் வந்தது என்பதனை எப்பிஐ விசாரித்து வருகிறது.



அதே நேரம் ஒரே வீட்டில் முன்று குழந்தைகளுடன் பிரிந்தது வாழ்ந்து வந்த விமானி ஷாஹ்வின் மனைவிடத்திலும் எப்பிஐ விசாரணைகளை தொடங்கியுள்ளது .விமானி ஷாஹ் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரா என்ற கோணத்திலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.



அதே நேரம் மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம் இன் தீவிர ஆதரவாளரான விமானி ஷாஹ் அன்வர் இம்ராஹீக்கு ஐந்து வருடம் சிறையில் அடைக்க தீர்ப்பு வழங்கப்பட்ட வேளை குறித்த நீதிமன்றத்தில் இருந்தும் ,சில மணித்தியாலங்களின் பின்னரே அவர் விமானத்தை செலுத்த சென்றதும் பின்னர் குறித்த விமானம் மாயமாகியதும் குறிப்பிடத்தக்கது.