8 வயது சிறுவனின் கின்னஸ் சாதனை!!

269

R1 R2

லிம்போ ஸ்கேட்டிங்கில் சென்னையைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஐசக் ஹென்றி ரூப்சன் கின்னஸ் சாதனை படைத்துள்ளான்.

தமிழகத்தில் லிம்போ ஸ்கேட்டிங் போட்டிகள் நடந்தது. 47 கார்கள் (ரெனால்ட் டஸ்டர்) வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்தன, சிறுவன் ஐசக் 2 பக்கமும் கால்களை நீட்டி தலையை குனிந்து ஸ்கேட்டிங்கில் வேகமாக வந்து வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்த கார்களுக்கு அடியில் சென்று வந்து சாதனை புரிந்தான்.

மொத்தம் 102 மீட்டர் தூரத்தை 27.4 வினாடியில் கடந்துள்ளான். இது லிம்போ ஸ்கேட்டிங்கில் நீண்ட தூரம் சென்றதில் இது சாதனையாகும்.

இதற்கு முன்பு 39 கார்களில் 69.2 மீட்டர் தூரத்தை 28 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐசக்கின் இந்த சாதனை தமிழ்நாடு, இந்தியா, ஆசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது, கின்னஸ் சாதனையிலும் இடம் பெறவுள்ளது.

இதுகுறித்து அவனது பெற்றோர் சீனு– ரூடா சபீனா தெரிவிக்கும் போது, ஐசக்கின் லிம்போ ஸ்கேட்டிங் சாதனை கின்னஸ் சாதனைக்கு அனுப்பட்டுள்ளது, 40 தினங்களில் அந்த சாதனையில் இடம் பெறும்.

பயிற்சியாளர் ரூபன்சன், உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் இதற்கு முக்கிய பங்கு வகித்தனர், இதற்காக அவன் படிக்கும் பள்ளி சிறப்பு அனுமதியும் ஊக்கமும் அளித்தது என்று கூறியுள்ளார்.