1000 கி.மீ வேகத்தில் பறக்கும் கார் : லண்டனில் சாதனை!!

298


Car

லண்டனில் மணிக்கு 1000 கி.மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடிய அதிநவீன கார் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.



இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த குழுவினரே இக்காரை வடிவமைத்துள்ளனர்.

சூப்பர் கானிக் என்றழைக்கப்படும் இக்காரில் விண்வெளி, ஏரோநாட்டிக்கல் மற்றும் பார்முலா 1 என்ஜினீயரிங் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.



கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது, இதற்கான சோதனை ஓட்டம் அடுத்த ஆண்டு (2015) நடைபெற உள்ளது. அப்போது மணிக்கு 800 கி.மீட்டர் வேகத்தில் ஓட்டப்படும்.



இக்காரை இதற்கு முன்பு மணிக்கு 736.035 கி.மீட்டர் வேகத்தில் ஒட்டி கின்னஸ் சாதனை படைத்த விங் கமாண்டர் ஆன்டிகிரீன் என்பவர் இயக்க உள்ளார்.


மேலும் 2016ம் ஆண்டில் தென்னாபிரிக்காவின் ஹக்ஸ்கேர்பான் பாலைவனப் பகுதியில் ஓட்டி சாதனை நிகழ்த்த திட்டமிடப்பட்டுள்ளது.