மோடி நினைப்பது வெற்றியடைய வேண்டும் : ரஜினி!!

278

Rajani

நரேந்திர மோடியும் நானும் பரஸ்பர நலம் விரும்பிகள், அவர் நினைப்பது வெற்றியடைய வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இச் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், நண்பர் ரஜினிக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்லவே அவரைச் சந்தித்தேன் என்றும் மோடி கூறியிருந்தார்.

வழக்கமாக குர்த்தா-பைஜமாவில் வரும் மோடி, நேற்று தமிழர் மரபு உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார். ரஜினி தன் குடும்ப உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார். மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா அனைவரையும் அறிமுகப்படுத்த, மோடிக்கு வணக்கம் தெரிவித்தனர்.

இந்த சந்திப்பு குறித்துப் பேசிய ரஜினி, நரேந்திர மோடியும் நானும் பரஸ்பர நலம் விரும்பிகள். நான் மருத்துவமனையில் உடல் நலமில்லாமல் இருந்த போதே என்னைப் பார்க்க வந்தவர் மோடி.

அவரை நான்தான் என் வீட்டுக்கு தேநீர் விருந்துக்காக அழைத்திருந்தேன், மோடி சிறந்த தலைவர், நிர்வாகியும் ஆவார், அவர் நினைப்பது வெற்றியடைய வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.