மௌன விரதத்தை கலைத்த யுவராஜ்சிங்!!

272

Yuvraj Singh of the Royal Challengers Bangalore and Virat Kohli captain of the Royal Challengers Bangalore celebrate after winning match 2 of the Pepsi Indian Premier League Season 7 between the Delhi Daredevils and The Royal Challengers Bangalore held at the Sharjah Cricket Stadium, Sharjah, United Arab Emirates on the 17th April 2014 Photo by Pal Pillai / IPL / SPORTZPICS

T20 உலகக்கிண்ணத்தில் இலங்கை அணியிடம் கண்ட தோல்வியை எளிதில் மறக்க முடியாது என்று இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வங்கதேசத்தில் நடந்த T20 உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வியுற்று கிண்ணத்தை இழந்தது. இந்தப் போட்டியில் யுவராஜ்சிங் 21 பந்துகளில் 11 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழந்து ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

T20 உலகக்கிண்ண இறுதிப்போட்டி தோல்வி குறித்து மௌனம் சாதித்து வந்த யுவராஜ்சிங், பெங்களூர் ரொயல் சேலஞ்சர்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு யுவராஜ்சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது..

இந்திய அணியின் ஆட்டம் T20 உலகக்கிண்ணப் போட்டியில் சிறப்பாக இருந்தது. ஆனால் இறுதிப்போட்டியில் ஆட்டம் நாங்கள் திட்டமிட்டப்படி நடக்கவில்லை.

உலகக் கோப்பையை நெருங்கி வந்து விட்டு இறுதிப்போட்டியில் தோல்வி காண்பது என்பது எப்பொழுதும் வருத்தத்தை அளிக்க தான் செய்யும். விளையாட்டு வீரர்கள் இது போன்ற உணர்ச்சிகளில் இருந்து விரைவில் மீண்டு வந்து அடுத்த சவால்களை சந்திக்க தயாராக வேண்டியது அவசியமானதாகும்.

வெற்றியையும், தோல்வியையும் ஒரே மாதிரியாக கையாள வேண்டும் என்று இளம் வயதில் எனது பயிற்சியாளர் கூறுவார். அவர் அப்போது சொன்னதை தான் கடைப்பிடிக்க விரும்புகிறேன்.

மேலும் கெய்ல், முரளிதரன், டிவில்லியர்ஸ், விட்டோரி, டொனால்ட் போன்ற சிறந்த வீரர்களுடன் இணைந்து பெங்களூர் ரொயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடும் வாய்ப்பை கெளரவமாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.