அமெரிக்காவுக்கு ஆப்பு வைத்த சீனா : 18 ஆயிரம் கோடி ரூபாவை இழந்த அமெரிக்கா!!

376

Corn

சோளம் இறக்குமதி செய்யும் நாடுகளில் மூன்றாமிடத்தில் சீனா உள்ளது. இது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சோளத்தை இறக்குமதி செய்து வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. இது சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

எனினும் அமெரிக்காவின் தேசிய விதையூட்ட கூட்டமைப்பு சார்பில், 2.9 பில்லியன் டொலர் பெறுமதியான மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம் சீனாவுக்கு கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதை தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க சீனா மறுத்து விட்டது. இது அமெரிக்காவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி உள்ளது.