மாமியாருக்கு ஐஸ் வைக்கும் நஸ்ரியா : மைத்துனர் பெருமிதம்!!

270

NAsriya

வருங்கால மாமியாருக்கு தினமும் போன் செய்து தாஜா செய்கிறார் நஸ்ரியா என்றார் பஹத் பாசிலின் சகோதரரான நடிகர் பர்ஹான்.

இயக்குனர் பாசில் மகன் பஹத் பாசில்-நஸ்ரியா திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் ஆலப்புழாவில் நடக்க உள்ளது. இதற்கிடையில் பஹத் சகோதரர் பர்ஹான் புதுமுக நடிகராக மலையாள படத்தில் அறிமுகமாகிறார். வரும் மே அல்லது ஓகஸ்ட் மாதம் இப்படம் திரைக்கு வரவுள்ளது. பர்ஹான் கூறியதாவது..

பஹத்-நஸ்ரியா திருமணத்தை சிறப்பாக நடத்த எங்கள் குடும்பம் முழுவதுமே ஆர்வமாக பணியாற்றி வருகிறது. நான் படத்தில் நடித்தாலும் தற்போது எனது அண்ணன் பஹத் திருமண வேலைகளில்தான் பிஸியாக இருக்கிறேன். திருமணத்தன்று நடனம் ஆடவும் எண்ணி உள்ளேன். எனது வருங்கால அண்ணி நஸ்ரியா நட்பாக பழகும் குணம் கொண்டவர். என்னுடைய அம்மாவுடன் அவருக்கு நன்றாக ஒத்துப்போகிறது.

தினமும் போன் செய்து எனது அம்மாவிடம் பேசுகிறார். நஸ்ரியா பக்கத்தில் இருந்தால் எப்போதும் கலகலப்பாக இருக்கும். எந்நேரமும் ஏதாவது ஒன்றுபற்றி பேசிக்கொண்டே இருப்பார். அதனால் போர் அடிக்காது. நாங்கள் எப்போதாவதுதான் சந்திப்போம். எப்போது சந்தித்தாலும் சினிமா பற்றியும், பொது விஷயங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருப்போம் என்றார்.