வவுனியா வசந்தி சினிமாவில் நடைபெற்ற பாடல்கள் வெளியீட்டு விழாவும், விருது வழங்கல் நிகழ்வும்!!(படங்கள்)

326


கோவில்குளம் இளைஞர் கழக தயாரிப்பில் ஸ்டார் மீடியா பிரியந்தனின் இயக்கத்தில் வெளிவந்த “அலைபாயும் மனசு”,” தேன் சிந்தும் பூக்கள்” ஆகிய பாடல்கள் நேற்று வவுனியா வசந்தி சினிமாவில் காட்சிப்படுத்தப்பட்டு கலைஞர்களுக்கான விருதுகளும் வழங்கி கெளரவிக்கபட்டது.

கோவில்குளம் இளைஞர் கழக தயாரிப்பில் ஸ்டார் மீடியா பிரியந்தனின் இயக்கத்தில் வெளிவந்த ” தேன் சிந்தும் பூக்கள்” பாடல் நோர்வே தமிழ் திரைப்பட விருது விழாவில் சிறந்த இசை மற்றும் ஒளிப்பதிவுக்கான விருதினை தட்டிசெல்வதுடன், எமது கலைஞர்களுக்கு பெருமையும் பெற்றுகொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



ரவிக்குமார் ரஞ்சன்(லண்டன்) அவர்களின் தயாரிப்பில் நெடுந்தீவு கவி அகிலனின் வரிகளில் உருவான என் தீவில் ஒரு காதல் பாடலும் காட்சிப்படுத்தப்பட்டு கலைஞர்களுக்கான விருதுகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

வவுனியா கலைத்துறையின் வரலாற்றில் ஒரே நாளில் திரையரங்கில் நேற்று (19.04) மூன்று பாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் மதிப்பையும் வரவேற்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



இவ் நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர்களான திரு. இந்திரராஜா, திரு தியாகராஜா , வவுனியா முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கலாசார உத்தியோகஸ்தர் திரு நித்தியானந்தன், வர்த்தக பிரமுகர் செந்தில்நாதன் மயூரன், வசந்தி சினிமா முகாமையாளர், மற்றும் பாடல்களின் இயக்குனர்கள், நடிகர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் ,ஒளிப்பதிவாளர்கள்,கவிஞர்கள், கலைஞர்கள், அறிஞர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்தனர்.



இவ் நிகழ்வில் கருத்து தெரிவித்த செந்தில்நாதன் மயூரன், எமது கலைஞர்களின் படைப்புகள் எம்மை வியக்க வைப்பதாகவும், இவர்களின் நிகழ்வில் எதிர்பார்ப்புகள் இன்றி வந்த என்னை இவ் பாடல் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. எமது கலைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவர்களின் முயற்சிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.


நிகழ்வில் கலைஞர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகரும், வவுனியா முன்னாள் உப நகர பிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள்,
தென்னிந்திய கலைஞர்களுக்கு நிகராக காட்சியமைப்பு கொண்ட பாடல்களாக அமைந்துள்ளதுடன் எமது கலைஞர்களின் பெரும் முயற்சிக்கு கிடைத்த ஓர் மாபெரும் வெற்றியெனவும் இவர்களின் வெற்றிப்பாதைக்கு எமது கழகம் என்றும் துணை நிற்கும், எதிர்வரும் காலங்களில் உங்கள் படைப்புக்கள் சிறக்க மனமார வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

11 12 13 14 15 16 17 18 19 20