திமுகவில் இணைந்தேன் ஆனால் இணையவில்லை : டி.ராஜேந்தர்!!

623

TR

திமுகவில் நான் இணையவுமில்லை, லட்சிய திமுகவை கலைத்துவிடவும் இல்லை என்று டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய லட்சிய திமுகவின் தலைவர் டி.ராஜேந்தர், தி.மு.க.வில் சாதாரண மூன்று ரூபாய் கட்டணம் செலுத்தி உறுப்பினர் அட்டை புதுப்பிக்கவில்லை என்று கூறி என்னை கட்சியில் இருந்து நீக்கினர்.

ஏழு வருட காலம் ஒரு கட்சியை, எல்லா பெரிய கட்சிகள் மத்தியிலும் வெற்றிகரமாக நடத்திய என்னை திமுக சிறுபிள்ளைத்தனமாக வெளியேற்றியது. ஆனால், திரும்பவும் நான் ஏன் திமுக தலைவரை சந்தித்தேன் என்றால், ஆற்காடு வீராசாமி என் வீட்டிற்கே வந்து வற்புறுத்தி அழைத்து சென்றார்.

திமுக தலைவர் கருணாநிதி ராஜதந்திரமாக எதுக்கு தனியாக கட்சி நடத்தி சிரமப்பட வேண்டும். பேசாமல் திமுகவில் இணைந்துவிடு என்றார். அனால் நான் ராஜதந்திரமாக கட்சியை கலைக்க மறுப்பு தெரிவித்து கூட்டணி மட்டும் வைத்துக் கொள்வோம். எங்களுக்கு 3 தொகுதிகளை மட்டும் தருமாறு கேட்டேன். அதற்கு யோசிப்பதாக கூறி அனுப்பி வைத்துவிட்டார்.

திமுகவில் உட்கட்சி பிரச்னை அதிகம் உள்ளது. கருணாநிதியே முடிவு எடுத்துவிட்டபிறகு நான் திமுகவில் சேர்வதை தடுத்த சக்தி எது?

மேலும் நான் திமுகவில் இணையவில்லை. இணைந்த மாதிரி இருக்கும். ஆனால் இணையவில்லை. கருணாநிதி அணைத்த மாதிரி இருக்கும். ஆனால் அணைக்கவில்லை.நான் லட்சிய திமுகவை ஒருபோதும் கலைத்துவிடவில்லை என்று கூறியுள்ளார்.