இந்­தி­யாவின் அடுத்த பிர­த­ம­ராக நரேந்­தி­ர­ மோடி : கருத்துக்கணிப்பு!!

610


Modi

இந்­தி­யாவில் கட்டம் கட்­ட­மாக நடை­பெற்­று­வரும் வாக்­க­ளிப்பில் பார­தீய ஜனதாக் கட்­சிக்கே அதிக வாய்ப்பு இருப்­ப­தா­கவும் அடுத்த பிர­த­ம­ராக நரேந்­திர மோடியே தெரிவு செய்­யப்­படும் சாத்­தி­யங்கள் இருப்­ப­தா­கவும் கருத்துக் கணிப்­புக்கள் கூறு­கின்­றன.



இந்­தி­யாவின் 16வது தேர்­தலின் பொருட்டு கடந்த 7 ம் திகதி வாக்­குப்­ப­திவு ஆரம்­ப­மா­னது. இந்த வாக்குப் பதி­வுகள் எதிர்­வரும் மே மாதம் 12 ம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளன.

இந்­திய லோக் சபாவில் 543 உறுப்­பி­னர்கள் அங்­கத்­துவம் வகிக்­கின்­றனர். இந்­தி­யாவின் 543 தேர்தல் தொகு­தி­களில் இருந்தும் இவர்கள் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள். இதில் 272 ஆச­னங்­களை தனி­யா­கவோ அன்றேல் கூட்டா­கவோ பெறும் கட்­சியே இந்­திய ஜனா­தி­ப­தியால் ஆட்சி அமைக்க அழைக்­கப்­ப­டுவார்.



எனினும் எந்­த­வொரு கட்­சியும் தனித்து அறுதிப் பெரும்­பான்­மை­யுடன் ஆட்சி அமைக்கும் வாய்ப்­புக்கள் இல்லை என்று கூறப்­ப­டு­கின்­றது.



அந்த வகையில் இந்தத் தட­வையும் கூட்­டணி கட்சி ஒன்றே ஆட்சி அமைக்கும் சாத்­தியம் உள்­ளது. அந்த வாய்ப்பு பார­திய ஜனதா கட்­சிக்கு கிட்டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.


எதிர்­வரும் 16 ஆம் திகதி வாக்­குகள் எண்­ணப்­பட்டு முடி­வுகள் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளன. 81.5 கோடி மக்கள் இத் தடவை வாக்­க­ளிக்­க­வுள்­ளனர். மேலும் இந்­திய லோக்­சபா தேர்தல் நெருங்­கி­விட்ட நிலையில் யார் பிர­த­ம­ராக ஆத­ரவு என்று இந்­திய சஞ்­சிகை ஒன்று வாரம் இரு­முறை கருத்துக் கணிப்பு நடத்தி முடி­வு­களை வெளி­யிட்­டுள்­ளது.

நரேந்­திர மோடி பிர­த­ம­ராக தமி­ழ­கத்தில் 51 சத­வீ­த­மானோர் ஆத­ரவு தெரி­வித்­துள்­ள­தாக குறித்த சஞ்­சி­கையின் கருத்துக் கணிப்பு கூறு­கி­றது.


லோக்­சபா தேர்தல் முடி­வுகள், யார் பிர­த­ம­ராக ஆத­ரவு என்­பது தொடர்­பாக மொத்தம் 25,247 பேரிடம் கருத்துக் கணிப்பை மேற்­கொண்­டுள்­ளது.

இக்­க­ருத்துக் கணிப்பு முடி­வுகள் நேற்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. யார் பிர­தமர் என்ற கேள்­விக்கு குறித்த சஞ்­சி­கையின் கருத்­துக்­க­ணிப்பு மோடிக்கே அதிக ஆத­ரவு என்று குறிப்­பிட்­டுள்­ளது.

பார­திய ஜன­தாவின் பிர­தமர் வேட்­பா­ளரும் குஜராத் முதல்­வ­ரு­மான நரேந்­திர மோடிக்கு மொத்தம் 50.68 சத­வீ­த­மானோர் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளனர். அதா­வது 12,796 பேர் ஆத­ரவு தெரி­வித்­தி­ருக்­கின்­றனர்.

தமிழக முதல்வர் ஜெய­ல­லிதா பிர­த­ம­ராக வேண்டும் என்று 25.71 சத­வீ­த­மானோர் கருத்து தெரி­வித்­துள்­ளனர். மொத்தம் 6,492 பேர் ஜெய­ல­லி­தா­வுக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளனர்.


ராகுல் காந்தி பிர­த­ம­ராக வேண்டும் என்­ப­தற்கு 21.37 சதவீதமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதாவது 5,396 பேர் ராகுலை ஆதரிக்கிறார்களாம்.

யார் பிரதமராக வேண்டும் என்பதற்கு 2.24% கருத்து சொல்ல முடியாது என்று கூறியுள்ளனர். மொத்தம் 563 பேர் கருத்து சொல்ல விரும்பவில்லையாம்.