அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்!!

241


Sivakarthikeyan

மான் கராத்தே படத்திற்கு பிறகு டானா என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். நடிகர் தனுஷ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்குகிறார்.



இந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனிடம் கைவசம் இன்னொரு படம் உள்ளதாம். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராம், அவர்களின் புதிய படத்தில் தான் நடிக்கயிருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ரஜினி ரசிகராக நடிக்க இருப்பதால் படத்திற்கு ரஜினி முருகன் என்று பெயர் வைக்க முடிவு செய்திருக்கின்றனர்.



இந்த விஷயம் அரசல்புரசலாக வெளியே கசிந்துள்ளது. மேலும் படத்திற்கு வேறு பெயர் வைக்கலாமா என்று யோசனை தான் செய்தார்களாம் படக்குழுவினர். இதுக்குள்ளயே படத்தின் பெயரை மாற்றக்கூடாது என்று அடம்பிடிக்கிறாராம் சிவகார்த்திகேயன்.