வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தால் துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு!!(படங்கள்)

322

வவுனியாவின் எல்லை கிராமமான கள்ளிக்குளம் பகுதியிலிருந்து உயர் கல்விக்காக ஓமந்தை மத்திய கல்லூரிக்கு செல்லும் மாணவி ஒருவருக்கு கனடாவில் வசிக்கும் திரு.அப்பன் அவர்களின் அன்பளிப்பில் வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டியினை நேற்று (22.04) தினம் புளொட் முக்கியஸ்தரும், கோவில்குளம் இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களினால் கல்லூரி அதிபர் திரு.திருஞானசம்பந்தமூர்த்தி அவர்களின் முன்னிலையில் மாணவியிடம் கையளிக்கபட்டது. அத்துடன் பாடசாலை அலுவலக பொருட்களும் கல்லூரி அதிபரிடம் கையளிக்கபட்டது

இவ் நிகழ்வில் கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு.க.சந்திரகுலசிங்கம்(மோகன்) ,கோவில்குளம் இளைஞர் கழக ஆலோசகர்களில் ஒருவரான சதீஸ், கோவில்குளம் இளைஞர் கழகத்தை சேர்ந்த காண்டீபன், சுகந்தன், நிகேதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவித்த புளொட் முக்கியஸ்தரும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகரும், வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு.க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள்..

தமிழர்களின் எல்லைக்கிராமங்களில் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியில் அதீத அக்கறை கொண்ட கோவில்குளம் இளைஞர் கழகம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது யாவரும் அறிந்த விடயம். எமது மாணவ சமூகத்தின் வளர்ச்சியே தமிழர்களின் வெற்றி எனவும், இன்றைய கால நீரோட்டத்தில் எமது மாணவ சமூகம் மறுமலர்ச்சி கொண்டு செயல்பட அனைவரும் ஏதோ ஒரு வகையில் உதவ, மாணவ செல்வங்கள் என்றும் அக்கறையுடன் செயல்பட்டு கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் முன்னேற்றம் அடைய வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

11 12 13