மார்க்கெட்டில் சண்டை போட்ட ஆர்யா!!

238

Aarya

ஆரம்பம் மாபெரும் வெற்றி படத்தை தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கும் படம் யட்சன். இப்படத்தை யுடிவி நிறுவனம் தயாரிக்கிறது. இதில் விஷ்ணுவர்தனின் ஆஸ்தான கதாநாயகனாக ஆர்யா தான் நடிக்கிறார்.

இது ஒரு ரொமாண்டிக் ஆக்சன் படமாக தயாராகி வருகிறது என விஷ்ணூவர்தன் தெரிவித்து உள்ளார். இப்படத்தில் ஒரு பிரம்மாண்ட சண்டை காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதை சென்னை உள்ள திருவல்லிகேணி ஜாம் பஜார் மார்க்கெட்டில் படமாக்கி வருகிறார் விஷ்ணுவர்தன்.

நெரிசல் மிகுந்த இப்பகுதியில் சண்டைக்காட்சி படமாக்கப்படுவது பெரிய சவால் என்றும், படத்தில் இந்தக் காட்சி பேசப்படும் காட்சியாகவும் இருக்கும் என்கிறார் இயக்குனர்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து சென்னையில் 20 நாட்கள் நடைபெறுகிறது. ஆரம்பத்தை விட அசத்தும் சண்டை காட்சி யட்சன் படத்தில் இருக்குமாம்.