மாத்தளையில் தீ விபத்தில் மூன்று வர்த்தக நிலையங்கள் சேதம்!!

313

Fire

மாத்தளை நகரின் கொடபொல சந்தியில் இன்று காலை மூன்று வர்த்தக நிலையங்கள் தீ பற்றி எரிந்துள்ளன.

மின் ஒழுக்கினால் ஏற்பட்ட இந்த தீ வேகமாக பரவியதாலேயே இம்மூன்று கடைகளுக்கும் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாநகர சபை தீயணைப்புப் பிரிவு ,பொது மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்