வவுனியா நகரசபைச் செயலாளர் மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு!!

442

Sivamokan

இலஞ்ச ஊழல் விசாரணை தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளர் த.தர்மேந்திராவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது..

இலஞ்ச ஊழல் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறவில்லை. ஆனால் அலுவலக மட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை, தன்மீது குற்றம் இருந்தால் நிரூபிக்கட்டும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை இன்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் இன்று காலை ஊடகவியலாளர்களை அழைத்து சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

நகரசபை செயலாளருக்கு எதிரான பல குற்றச்சாட்டுக்களையும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியிருந்ததுடன் அதற்கான ஆதாரமும் தன்னிட்டம் இருப்பதாகவும் வவுனியா நகரில் அனுமதியின்றி கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் முறையாக அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும்,

தனியார் விளம்பர நிறுவனம் ஒன்றிலிருந்து வவுனியா நகரபைச் செயலாளர் ஐந்து இலட்சம் ரூபாவினை கையாடல் செய்துள்ளதாகவும் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் காண்பித்ததுடன் சட்டரீதியாக நகரசபை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், மின்சாரத்தின் உதவியுடன் இறந்தவர்களை தகனம் செய்யும்போதும் அதற்கான கட்டணத்தில் நகரசபைச் செயலாளர் கையாடல் செய்துள்ளதாகவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் மேலும் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டு தொடர்பாக நகரசபை செயலாளரிடம் தொடர்பு கொண்டபோது..

அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்த நகரசபைச் செயலாளர் விடுமுறை தினங்களில் இறந்தவர்களை தனம் செய்ய வரும்போது நகரசபை ஊழியர்கள் விடுமுறையில் சென்றதால் தகனம் செய்யும் பொறுப்பினை வேறு உழியர்களிடம் ஒப்படைக்க வேண்டிய தேவையினையும் தெளிவுபடுத்தியிருந்தார்.

எது எவ்வாறாயினும் தன்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதுடன் நின்றுவிடாது அதை உறுதிப்படுத்த நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் எந்த ஒரு நடவடிக்கையை தன்மீது மேற்கொண்டாலும் எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.