ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத சிம்பாப்வே வீரர்களுக்கு சிறை?

287


Zimbabwe-Olympic

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லாத சிம்பாப்வே வீரர்களை சிறையில் அடைக்க அந்த நாட்டு அதிபர் உத்தரவிட்டதாக வெளியான செய்திகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.



ரியோ ஒலிம்பிக்கில் சிம்பாப்வே நாட்டின் சார்பாக மொத்தம் 31 வீரர்கள் கலந்து கொண்டனர். ஆனால் யாருமே பதக்கம் வெல்லவில்லை.

இந்த நிலையில் சிம்பாப்வே நாட்டின் சர்வாதிகார அதிபரான ராபர்ட் முகாபே ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.



அந்த வீரர்களை எலிகளுடன் ஒப்பிட்டு அதிபர் பேசியதாகவும், நாட்டின் பணத்தை அவர்கள் வீண் செய்துவிட்டதாக கோபப்பட்டதாகவும் அந்நாட்டு இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.



இந்த செய்தி உலகம் எங்கும் பரவி பரபரப்பை ஏற்பத்திய நிலையில், அந்த செய்தியில் உண்மையில்லை என்று அதிபர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.


இதே போன்று ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வட கொரியா வீரர்களை நிலக்கரி சுரங்கத்திற்கு வேலைக்கு அனுப்ப அந்த நாட்டு அதிபர் உத்தரவிட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.