கிரிக்கெட்டில் தூக்கம் தொலைத்த நாட்கள் இதுதான் : உண்மையை உடைத்த டில்ஷான்!!

419


Dilshan

இலங்கை அணியின் தலைவராக செயல்பட்ட 10 மாதங்கள் தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் தூக்கம் தொலைத்த நாட்கள் என்று ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்ற டில்ஷான் கூறியுள்ளார்.



சங்கக்காரா 2011ம் ஆண்டு உலகக்கிண்ண தொடரோடு ஓய்வு அறிவித்தார். இதன் பின்னர் இலங்கை அணியின் தலைவராக செயல்பட்ட டில்ஷானுக்கு, இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா தொடர் சிக்கல் மிகுந்ததாக மாறிவிட்டது.

இந்நிலையில் நேற்று ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டில்ஷான் அணித்தலைவராக தான் சந்தித்த சவால்களை பற்றி பேசியுள்ளார்.



அவர் கூறுகையில், நான் தூக்கம் தொலைத்த நாட்களும் இருக்கிறது. அதில் இருந்து மீள நினைத்த போது, என்னால் அதில் இருந்து மீண்டு வரமுடியாமல் போனது.



பல பிரச்சனைகளை சந்தித்தேன், நான் அணித்தலைவர் பதவியை கேட்கவில்லை. ஆனால் அந்த இடத்தில் நான் தலைவராக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.


ஆனால் தலைவர் பதவி பலரை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. அதன் மூலம் நான் அதிகமாக கற்றுக் கொண்டேன்.

நான் சந்தித்த ஒரு பிரச்சனை இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க சில ஆட்சேபனைகள் இருந்தன. அந்த அழுத்தங்களை என்னால் எதிர்த்து போராட முடியவில்லை. ஆனால் அதையும் தாண்டி சிலர் அதிசங்களை நிகழ்த்தினர்.


இதற்கு பின்னால் ஏதோ ஒன்று நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதை பற்றி சிலர் நன்றாக அறிவர்.

மேலும், லாட்ஸ் டெஸ்டில் 193 ஓட்டங்கள் குவித்ததை ஒரு போதும் என்னால் மறக்க முடியாது. ஏனெனில் லாட்ஸில் சதம் அடிக்க வேண்டும் என்பது அனைவரின் கனவாக இருக்கும். அந்த வகையில் அது எனக்கு சிறப்பான தருணம் என்று கூறியுள்ளார்.