பிரிட்டனில் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ள கிர்தின் நி்த்தியானந்தம்!!

322


B1

மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளான் பிரிட்டனில் வசிக்கும் கிர்தின் நி்த்தியானந்தம்.



மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்கள் தான்.

இதைத் தொடக்கத்திலேயே கண்டறிந்துவிட்டால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை டமோக்சி பென் என்ற மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். வளர்ச்சியை தடுக்க முடியுமே தவிர, புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது.



இந்நிலையில் இதற்கான சிகிச்சை முறையை இந்திய வம்சாவளியை சேர்ந்த கிர்தின் நித்தியானந்தம் என்ற சிறுவன் கண்டுபிடித்துள்ளான்.
இதுகுறித்து கிர்தின் கூறுகையில், இதுவரையிலும் மருந்துகளுக்கு கட்டுப்படாமல் இருந்த எதிர்மறை மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை முறையைக் கண்டுபிடித்துள்ளேன்.



குறிப்பாக, இந்த வகை புற்றுநோய்க்கு காரணமாக உள்ள ஐடி4 புரதத்தை உருவாக்கும் மரபணுக்களை அழிப்பதற்கான வழிமுறையைக் கண்டுபிடித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.


கடந்தாண்டு நடந்த கூகுள் அறிவியல் கண்காட்சியில் கிர்தினுக்கு, அல்ஜீமர் நோயை முன்கூட்டியே கண்டறியும் முறையை கண்டுபிடித்ததற்காக விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

B2