ஆடை களைந்து போராட்டம் நடத்திய மொங்கோலிய மல்யுத்த பயிற்றுநர்களுக்குத் தடை!!

269

protest

மொங்­கோ­லி­யாவின் மல்­யுத்தப் பயிற்­று­நர்கள் இரு­வ­ருக்கு ஐக்­கிய உலக மல்­யுத்த சங்­கத்­தினால் இரண்டு வருடத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ரியோ ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் நடை­பெற்ற வெண்­கலப் பதக்­கத்­திற்­கான மல்­யுத்த போட்­டி­யின்­போது தமது வீரர் கன்­சோ­ரிஜின் மந்­தாக்­நரன் என்­ப­வ­ருக்கு எதிராக அதி­கா­ரிகள் வழங்­கிய தீர்ப்பை எதிர்த்த கார­ணத்­திற்­காக செரென்­பாட்டார் சொக்­பயார், பியாம்­ப­ரின்ச்சென் பயரா ஆகிய இரு­வ­ருக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சக­ல­வி­த­மான மல்­யுத்தப் போட்­டி­க­ளிலும் இவர்கள் இரு­வரும் 2019வரை பங்­கு­பற்ற முடி­யா­த­வாறு ஐக்­கிய உலக மல்­யுத்த சங்கம் தடை விதித்­துள்­ளது. அத்­துடன் மொங்கோ­லிய மல்­யுத்த சங்­கத்­திற்கும் 50,000 சுவிஸ் ப்ராங்­குகள் அப­ராதம் விதிக்கப்பட்­டுள்­ளது.

ரியோ ஒலிம்­பிக்கில் உஸ்­பெ­கிஸ்­தானின் இக்­தியோர் நவ்­ரு­ஸோ­வுக்கு எதி­ரான வெண்­கலப் பதக்­கத்தை தீர்­மா­னிக்கும் சாதா­ரண மல்­யுத்தப் போட்­டியில் மந்தாக்நரன் 7 – 6 என்ற புள்­ளிகள் கணக்கில் முன்­னி­லையில் இருந்தார்.

ஆனால் போட்டி முடிய 18 செக்­கன்கள் இருந்­த­போது மந்­தாக்­நரன் சண்டையிடுவதற்குப் பதி­லாக வெற்­றிக்­கொண்­டாட்­டத்தில் குஷி­யாக இருந்தார்.

இதனை யடுத்து அவர் சண்­டை­யிடத் தவ­றி­ய­தற்­காக போட்டி விதி­களின் பிர­காரம் அவ­ரது புள்­ளிகள் மத்­தி­யஸ்­தர்­க­ளினால் கழிக்கப் பட்டது. இதனையடுத்து அவர் தோல்வியடைந்தார்.

இதனையடுத்து மோங்கோலிய பயிற்றுநர்கள் அரங்கில் தமது ஆடைகளைக் களைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியமைக்காகவே பயிற்றுநர்கள் இருவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.