கூகுள் FIBER சேவையை விட 1,000 மடங்கு வேகம் கூடிய இணையம்!!

321

5g

தற்போது இணைய சேவையானது 4G தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னைய வேகத்தினை விடவும் அதிக வேகம் கொண்டதாக உலக நாடுகளில் வழங்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் 5G தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்து இணைய வேகத்தினை மேலும் அதிகரிக்க பல்வேறு நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முளைப்புக் காட்டி வருகின்றனர்.

இம் முயற்சியின் பயனாக கூகுள் நிறுவனம் செக்கனுக்கு 1 ஜிகாபிட் (1Gbps) வேகத்தில் குறுகிய தூரத்திற்கு தரவுகளைக் கடத்தும் கூகுள் பைபர் எனும் இணையத் தொழில்நுட்பத்தினை உருவாக்கியிருந்தது.

தற்போது இந்த வேகத்தினையும் முறியடிக்கும் வகையில் ஜேர்மனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிய இணையத் தொழில்நுட்பத்தினை உருவாக்கியுள்ளர்.

இத் தொழில்நுட்பமானது கூகுள் பைபர் இணைய வேகத்தினை விடவும் 1,000 மடங்கு வேகம் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஒரு செக்கனில் 125 ஜிகா பைட் வரையிலான தரவுகளை தரவிறக்கம் செய்ய முடியும் எனவும், இது 5GB அளவுடைய 25 படங்களை தரவிறக்கம் செய்வதற்கு சமமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது Technical University of Munich, Nokia Bell Labs, மற்றும் Deutsche Telekom T-Labs இணைந்து இத் தொழில்நுட்பத்தினை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றன.

இதேவேளை பிரித்தானியாவை சேர்ந்த குழு ஒன்று கடந்த வருடம் 1 Tbps தரவிறக்க வேகம் கொண்ட 5G தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்திருந்தது.

எனினும் இதன் ஊடாக 100 மீற்றர் எனும் குறுகிய தூரத்திற்கே தரவுகளை பரிமாற்றக்கூடியதாக இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.