கோவில்களில் தரும் கயிறுகளை எத்தனை நாள் எந்தக் கையில் கட்ட வேண்டும் என்று தெரியுமா?

493


kovil

காசி, திருப்பதி,நல்லூர் போன்ற இடங்களுக்கும், இன்னும் பல அம்மன் கோயில்களிலும் பைரவர் கயிறு, வெங்கடாஜலபதி கயிறு என கருப்பு கயிறுகள் வாங்கி கட்டி வருகிறார்கள். சில கோயில்களில் சிவப்பு, மஞ்சள் கயிறு கையில் கட்டப்படுகிறது.



இதை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமி நோன்பு கயிறை மட்டும் பெண்கள் வலது கையில் கட்ட வேண்டும். இந்தக் கயிறுகளை பெரும்பாலானவர்கள் ஒரு வருடம் வரையிலும் அதற்கு மேலும் கட்டிக் கொள்கிறார்கள்.

அவ்வாறு செய்யக்கூடாது. இந்த கயிறுகளுக்குரிய காலம் 48 நாட்கள் மட்டுமே. அதன்பின், இதைக் கழற்றி ஆற்றிலோ பிற நீர்நிலைகளிலோ போட்டு விட வேண்டும். யார் காலிலும் படும்படி போடக்கூடாது.