தெரு நாய்களைக் கொன்று ஊர்வலமாக எடுத்து செல்லும் வினோதப் போராட்டம்!!

432


dog

கேரளாவில் தெரு நாய்களை கொன்று ஊர்வலமாக எடுத்து செல்லும் வினோத போராட்டம் நடைபெற்றுள்ளது.



கேரளாவில் சமீபத்தில் ஏராளமான தெருநாய்கள் கடித்து குதறியதில் சிலுவம்மா என்ற மூதாட்டி பலியாகியுள்ளார்.

இந்நிலையில், தெரு நாய்களின் தொல்லைகளை குறைக்கும் வண்ணம் நாய்களை கொல்ல மாநில அரசு முடிவு செய்து கிராம நிர்வாகத்திற்கு இதுதொடர்பாக உத்தரவிட்டு உள்ளது.



இந்நிலையில், இந்த முடிவினை மத்திய மந்திரி மேனகா காந்தி சட்டவிரோதமானது என்று விமர்சனம் செய்துள்ளார்.



இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்த மத்திய அமைச்சர் மேனகா காந்தியை கண்டித்தும், தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தக் கோரியும், மானி தலைமையிலான கேரள காங்கிரஸ் கட்சியினர் கோட்டயத்தில் தெருநாய்களை கொன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லும் வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதற்காக சில சில தெருநாய்களை கொன்று கட்டை ஒன்றில் கட்டி ஊர்வலமாக தபால் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு சென்று மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு அதனை அனுப்பி வைக்கும் படி வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, நாய்களை கொன்றவர்கள் மீது கோட்டயம் காவல்நிலையத்தில் விலங்குகளை கொடூரமாக கொன்றதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆனால், வெறிபிடித்த நாய்களை மட்டுமே கொன்றதாக கேரள காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.