வவுனியாவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை!!

316

 
வவுனியா மாவட்டத்தின் கால்நடை வைத்திய நடமாடும் சேவை இன்று (18.10.2016) காலை 9 மணிக்கு வவுனியா சாஸ்திரிகூழாங்குளம் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

வடமாகாண விவசாய கால் நடைகள் அமைச்சர் பொ.ஜங்கரநேசன கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்துவைத்தார்.

இந்நிகழ்வில் கால்நடை பண்ணைகளை பதிவு செய்தல், விலங்கு நோய்களுக்கான மருத்துவ சேவை, ஆண். பெண் நாய்கள், பூனைகளுக்கான கருத்தடை அறுவைச் சிகிச்சை, விலங்கு நோய்த் தடுப்பு மருந்து வழங்கல் செல்லப்பிராணிகளுக்கு விசர்நாய்த் தடுப்பு, கோழிகளுக்கான கொள்ளை நோய், கம்டபோறா, கோழி அம்மை, மாடுகளுக்கான கருங்காலி நோய், கால்வாய், நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் வழங்கல், விலங்குகள் இனப்பெருக்க சேவை, விவசாய, கால்நடை காப்பறுதி சேவை, வங்கிச் சேவை,

கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்கத்தின் சேவை, கால் நடை பண்ணை உபகரணங்கள், உள்ளீடுகளை உற்பத்திசெய்யும் கம்பனிகளின் சேவை, தனியார் கால்நடை உற்பத்தி பொருட்கள் விற்பனை போன்ற சேவைகளும் இடம்பெற்றது.

வடமாகாண சபையினால் குறித்து ஒதுக்கப்பட்ட நிதியின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு வாழ்வாதார உதவிகளும், விவசாய உள்ளீடுகள் என்பன் அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், வடமகாணசபை உறுப்பினர்களான இ.இந்திரராசா, ம.தியாகராசா, ஜெயதிலக, அமைச்சின் செயலாளர் ப.சத்தியசீலன், மற்றும் கால்நடை திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்பின் பிரதிநிதிகள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.

_mg_1576_1 _mg_1585 _mg_1588 _mg_1589 _mg_1590 _mg_1594 _mg_1595 _mg_1597 _mg_1599 _mg_1600 _mg_1603 _mg_1604 _mg_1605 _mg_1609 _mg_1612 _mg_1617 _mg_1618 _mg_1619 _mg_1621 _mg_1623 _mg_1626 _mg_1627 _mg_1629 _mg_1631