என்னுடைய சாதனையை இவர்கள் தான் முறியடிப்பார்கள் : அடித்துச் சொல்லும் முரளிதரன்!!

262


muralitharan

இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவர் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவரின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு எதிரணி மட்டையாளர்கள் அவ்வளவு சிரமப்படுவார்கள்.



அது மட்டுமில்லாமல் தனது 133 வது டெஸ்ட் போட்டிகளிலே 800 விக்கெட் வீழ்த்திய முதல் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் தான். இவர் ஓய்வு பெற்ற பிறகு இவருடைய இடத்தை நிரப்புவதற்கு சரியான வீரர்கள் இன்னும் இலங்கை அணிக்கு கிடைக்கவில்லை. ஆனால் தற்போது இலங்கை அணியின் சிறப்பான சுழற்பந்து வீச்சாளராக ஹெராத் உள்ளார்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த முரளிதரன் தன்னுடைய சாதனையை முறியடிப்பதற்கு இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.



அதில் இந்திய அணியைச் சேர்ந்த அஸ்வினுக்கும், பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த யாசிர் ஷாவையும் அவர் தெரிவித்துள்ளார்.



தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய அணியைச் சேர்ந்த அஸ்வின் சிறப்பாக பந்து வீசி வருகிறார். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் ஆசிய கண்டத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்.


அவருடன் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடன் விளையாடிய அனுபவம் உள்ளது என்றும், முதலில் அவர் பிட்சின் தன்மையை அறிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல் துல்லியமாக பந்து வீசும் திறமை கொண்டவர். அவர் தன்னம்பிக்கை கொண்டவர் என்றும் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தன்னை ஒரு பந்துவீச்சாளராக மட்டுமில்லாமல் சிறந்த பண்முக ஆட்டக்காராகவும் திறமையை நிரூபித்து வருகிறார். அவருடைய துடுப்பாட்டத்தில் மூலம் இந்திய அணி சில தோல்விகளில் இருந்து தப்பியுள்ளது எனவும் சில போட்டிகளில் வென்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


அஸ்வினைப் போன்று பாகிஸ்தானைச் சேர்ந்த யாசிர்ஷாவும் சிறப்பாக பந்து வீசுவதாகவும், அஸ்வின் மற்றும் யாசிர்ஷா இவர்கள் தற்போது செயல்படுவது போல் செயல்பட்டால் தன்னுடைய சாதனையை இவர்கள் எளிதில் எட்டிவிடுவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளார்.