கணவனை திட்டிய மனைவிக்கு ரூ.48 லட்சம் அபராதம்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

307

Man being angry at woman and using violence

இத்தாலி நாட்டில் பெற்ற மகன் முன்னிலையில் பெண் ஒருவர் அவரது முன்னாள் கணவனை திட்டிய குற்றத்திற்காக அவருக்கு ரூ.48 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இத்தாலி தலைநகரான ரோமில் பெயர் வெளிடப்படாத கணவன் மற்றும் மனைவி இருவர் தங்களுடைய மகனுடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், தம்பதிக்கு ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர்.எனினும், மகன் தாயாரிடம் வளர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் சட்டப்படி, பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்தாலும் கூட, அவர்கள் இருவரையும் நேரில் சந்திக்கவும், உறவை வளர்த்து கொள்ளவும் அவர்களின் பிள்ளைகளுக்கு உரிமை உள்ளது.ஆனால், இந்த சட்டத்திற்கு எதிராக தாயார் செயல்பட்டுள்ளார். தன்னுடைய மகன் முன்னிலையில் தனது முன்னாள் கணவரை கடுமையாக விமர்சனம் செய்து திட்டி வந்ததாக அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது.

இவ்வழக்கு குடும்ப நீதிமன்றத்திற்கு நேற்று வந்தபோது, ‘மகன் முன்னிலையில் முன்னாள் கணவரை கடுமையாக விமர்சனம் செய்வது மாபெரும் குற்றம்.இதனால் மகனுக்கும் அவரது தந்தைக்கும் உள்ள உறவில் பிளவு ஏற்படும். இதுபோன்று ஒரு சூழலை தாயார் ஏற்படுத்த முயல்கிறார்.

எனவே, முன்னாள் கணவரை திட்டிய குற்றத்திற்காக தாயாருக்கு 30,000 யூரோ(48,06,883 இலங்கை ரூபாய்) அபராதம் விதிப்பதாகவும், இனிவரும் காலத்தில் இதே குற்றத்தை தாயார் தொடர்ந்து செய்தால், அவரது மகனை முன்னாள் கணவரிடம் ஒப்படைக்க நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.