தமிழைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டுமென அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை!!

212


aus

அவுஸ்திரேலியாவில் தமிழர்கள் செரிந்து வாழும் பகுதியான வெட்வோர்த்வில்லேயில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர் ஹக் மெக்டர்மோட்.



அவுஸ்திரேலியரான இவர், தமிழ் மொழியை அவுஸ்திரேலியப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்நாட்டு கல்வி அமைச்சரிடம் எழுத்து மூலம் முன்வைத்துள்ளார்.

சர்வதேசத்தில் சுமார் 70 மில்லியன் மக்களால் பேசப்பட்டு வரும் உலகின் தொன்மையான தமிழ் மொழியை பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம், தமிழர்களின் நீண்ட பெரும் பண்பாட்டையும் கலாசாரத்தையும் அனுபவிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.



தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல, அதுவொரு சிறப்பான கலாசாரம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



மேலும், தமிழானது வர்த்தகம் மற்றும் பொருளாதார ரீதியாக இந்தியா, இலங்கை, அவுஸ்திரேலியாவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.


தமிழின் அருமையை உணர்ந்த அவுஸ்திரேலியரான ஹக் மெக்டர்மோட், எப்படியாவது தேசிய பாடத்திட்டத்தில் தமிழை சேர்த்துவிட வேண்டும் என தொடர்ந்து முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அவர் அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்திலும் உரையாற்றியுள்ளார்.