கைத்­தொ­லை­பே­சி­க­ளுக்­காக விசேட கழி­வறை கட­தாசி : ஜப்பானிய விமான நிலைய கழி­வ­றை­களில் அறி­முகம்!!

343


 
கைத்தொ­லை­பே­சி­க­ளுக்­கான கழி­வறை கட­தாசி ஜப்­பானில் அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது. டோக்கியோ நக­ரி­லுள்ள நரீட்டா சர்­வ­தேச விமான நிலையத்தின் கழி­வ­றை­களில் இந்த ஸ்மார்ட்போன் டொய்லெட் பேப்பர் சுருள்கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன.

ஜப்­பா­னிய டெலிகொம் நிறு­வ­ன­மான என்.ரி.ரி. டெகோமோ எனும் இந்­நி­று­வ­னமே கைத்­தொலைபே­சி­க­ளுக்­கான நவீன கழி­வறை கட­தா­சி­களை பொருத்­தி­யுள்­ளது.



ஸ்மார்ட்போன் ஸ்கிறீன்­களில் அதிக கிரு­மிகள் பர­வி­யி­ருப்­ப­தாக ஆய்­வு­களில் கண்­ட­றி­யப்­பட்­ட­தை­ய­டுத்து, மக்கள் தமது ஸ்மார்ட்­போன்­களை சுகா­தா­ர­மாக பாது­காத்­துக்­கொள்­வ­தற்­காக ஸ்மார்ட்போன் டொய்லெட் பேப்­பர்­களை தயா­ரிக்கும் யோசனை முன்­வைக்­கப்­பட்­டது.

நரீட்டா சர்­வ­தேச விமான நிலை­யத்தின் கழி­வ­றை­க­ளுக்கு எதிர்­வரும் மார்ச் 15 ஆம் திகதிவரை தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன் டொய்லெட் பேப்பர்கள் விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.