அதிக எடையே ஆரோக்கியமானது!!

391


டென்மார்க்கில் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து, அதிக எடை BMI சுட்டிகொண்டவர்கள், குறைவான எடையுள்ளவர்களிலும் ஆரோக்கியமானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.இதற்கென 100,000 பேர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதிலிருந்து முன்னைய ஊகங்கள் அதாவது ஆரோக்கியமான BMI சுட்டி, நீண்ட கால வாழ்க்கைக்கு சமம் என்ற கருத்துக்கள் மேல் கேள்விக்குறி எழத்தான் செய்கிறது.ஆனாலும் இதுதான் முதல் தடவையல்ல, இதற்கு முன்னரும் பல ஆய்வுகள் உடல் எடை சிறிது அதிகரிப்பதால் ஆரோக்கியத்திற்கு எவ்வித பங்கமும் ஏற்படப்போவதில்லை என தெரிவித்திருக்கின்றன.

இவ் ஆய்வு டென்மார்க்கிலுள்ள வைத்தியப் பல்கலைக்கழகம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.கிட்டத்தட்ட 100,000 இற்கும் மேலானவர்களின் மருத்துவ தகவல்கள், 15 வருடத்தினர் ஒரு குழுவாக மொத்தம் மூன்று குழுக்களாக ஆராயப்பட்டது.நாற்பது வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வின்படி, 1976 – 2013 காலப்பகுதிகளில் BMI சுட்டி குறைவானவர்களில் இறப்பு வீதம் அதிகரித்துள்ளமை இனங்கானப்பட்டது.

BMI சுட்டி18.5 – 24.9 க்குட்பட்டவர்கள்சராசரி அல்லது ஆரோக்கியமானவர்களாகவும், BMI சுட்டி 25 – 29.9 வரையானவர்கள் அதிக எடையுடையவர்களாகவும், BMI சுட்டி 30 அல்லதுஅதற்கு மேலானவர்கள் அதிக பருமன் உடையவர்களாகவும் கருதப்படுகின்றனர்.

அதேநேரம் இக்காலப்பகுதியில், அதிக பருமன் உடையவர்களிலும் அதாவது BMI சுட்டி 30 ற்கு அதிகமானவர்களிலும் இறப்பு வீதம் அதிகரித்தமை இனங்கானப்பட்டது.இவ் ஆய்வின் போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களின் நோய் நிலைமைகள், வயது, பால், பொருளாதார நிலைமைகள் கருத்தில் கொள்ளப்பட்டிருந்தது.