மலேசியாவை மூழ்கடித்த கனமழை, வெள்ளப்பெருக்கால் 23 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்!!

313


 
மலேசியாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை தொடர்ந்து 23 ஆயிரம் மக்கள் அவர்களின் வீடுகளில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு பகுதியில் உள்ள இரண்டு மாநிலங்களில் இந்த ஆண்டு அதிக அளவில் மழை பெய்து வருகிறது. கடந்த 5 நாட்களுக்கு மேலாக பெய்து வரும் கனமழையால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.



இதனையடுத்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து சுமார் 23 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கெலண்டன் பகுதியில் இருந்து 10,038 பேரும், டெரென்கனு பகுதியில் இருந்து 12,910 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த மழையால் சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ரெயில் போக்குவரத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்னும் கனமழை பெய்து வருவதால் 30க்கும் மேற்பட்ட கிராமத்திற்கான சாலைகள் முடங்கி உள்ளன.



பாதிக்கப்பட்டவர்களுக்கு 139 நிவாரண முகாம்கள் மூலம் உணவு, நீர் மற்றும் மருத்துவ உதவி பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மழை வெள்ளத்தால் உயிரிழப்பு குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.