தென்னாபிரிக்க அணி 282 ஓட்டங்களால் வெற்றி!!

293

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் பேட்டியில் 282 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது.

இப்போட்டியின் முதலாவது இனிங்சில் தென்னாபிரிக்க அணி 392 ஓட்டங்களையும், இலங்கை அணி 110 ஓட்டங்களைப் பெற்றது.

இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 07 விக்கட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

அதன்படி இலங்கை அணி இந்தப் போட்டியில் வெற்றிபெற வேண்டுமாயின் 507 என்ற இலக்கு இருந்தது.

எனினும் 224 ஓட்டங்களைப் பெற்ற இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்துள்ளது.