கிளிநொச்சி மாவட்டத்தின் சாதனையாளர்கள்!!

621

வெளிவந்துள்ள க.பொ.த உயர்தர பெறுபேறுகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் விஞ்ஞானப் பிரிவில் வட்டக்கச்சி மகா வித்தியாலமும், கணிதப் பிரிவில் கிளிநொச்சி மத்திய கல்லூரியும், வணிக்கப் பிரிவில் சென்திரேசா பெண்கள் கல்லூரியும், கலைப்பிரிவில் கிளிநொச்சி மகா வித்தியாலயமும், தொழிநுட்ப பிரிவில் கிளிநொச்சி இந்துக் கல்லூரியும் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளன.

கிளிநொச்சி வட்டக்கச்சி மகாவித்தியாலய மாணவி காசிலிங்கம் தனுசா இரண்டு ஏ,பி பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் நிலையை பெற்றுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவி சிம்மேந்திரன் சஜீபா இரண்டு ஏ,பி பேறுகளை பெற்று இரண்டாம் நிலையையும் இராமமூர்த்தி செந்தீபன் இரண்டு ஏ,பி பெறுபேறுகளை பெற்று மூன்றாம் நிலையையும் பெற்றுள்ளார்கள்.

கணிதப் பிரிவில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்களான சந்திரகேசரன் சோபனபிரியன், 3ஏ பெறுபேறுகளை பெற்று முதலாம் நிலையையும், நாகேந்திரன் கேசவராஜ் இரண்டு ஏ,பி பெறுபேறுகளை பெற்று இரண்டாம் நிலையையும் பெற்றுள்ளனர்.

கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவி சௌந்தரராஜா யோகதர்மினி ஏ, இரண்டு பி பெறுபேறுகளை பெற்று மூன்றாம் நிலையையும் பெற்றுள்ளார்.

இதேவேளை, உயிரியல் தொழிநுட்ப பிரிவில் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவன் மகேந்திரன் தார்த்திக்கரன் ஏ,இரண்டு பி பெறுபேறுகளை பெற்று மாவட்டத்தில் முதல் நிலையையும் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி தர்மகுலபாலசிங்கம் டிலோஜன் மூன்று பி பெறுபேறுகளை பெற்று இரண்டாம் நிலையையும் கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சிவகுமாரன் தர்சிகா இரண்டு பி,சி பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலையையும் பெற்றுள்ளனர்.

வணிகப்பிரிவில் கிளிநொச்சி சென்திரேசா பெண்கள் கல்லூரி மாணவி கந்தசாமி டிலக்சிகா மூன்று ஏ பெறுபேறுகளை பெற்று முதல் நிலையிலும், பளை மத்திய கல்லூரி மாணவி அண்ணாவிப்பிள்ளை ஆன்நிலக்சனா மூன்று ஏ பெறுபேறுகளை பெற்று மூன்றாம் நிலையினையும், கலைப்பிரிவில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் இரவீந்திரன் துவாகரன் மூன்று ஏ பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் நிலையையும் பெற்றுள்ளனர்.