விசித்திரமான சிற்பங்களை உருவாக்கும் பனித்திருவிழா!!

411


 
பல்வேறு விசித்திரமான சிற்ப உருவாக்கங்களுடன் 8 இலட்சம் சதுர அடிப்பரப்பில் சீனாவின் ஹார்பின் நகரில் பனிச் சிற்பங்கள் திருவிழா நடைபெறுகிறது. அதனால் தனித்துவ மிக்கப் பனிச் சிற்பங்கள் பல்வேறு கலைஞ்சர்களால் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஹார்பின் நகரிற்கு அருகில் இருக்கும் சோங்ஹுவா பணியாற்றிலிருந்து பனிக்கட்டிகள் வெட்டப்பட்டு சிற்பங்களாக வடிக்கப்படுகின்றன. அதில் விலங்குகள், கோட்டைகள், உலகப் புகழ்பெற்ற சின்னங்கள், கேலிசித்திர கதாபாத்திரங்கள் என விதவிதமான சிற்பங்களும், கட்டிடங்களும் பார்வையாளரை பிரமிப்பூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.



ஹார்பின் நகரில் தற்போது -25 பாகை செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது. இந்நிலையில் சுமார் 500 சிற்ப கலைஞ்சர்களின் உழைப்பில் இந்தப் பனிச் சிற்பங்கள் உருவாகியிருக்கின்றன.

இவ் பனிச் சிற்பத் திருவிழா, மார்ச் மாதம் வரை நடைபெறும். மேலும் பல்வேறு நாடுகளிலிருந்து பனிச் சிற்பங்களைப் பார்வையிடுவதற்காக சுமார் 1.5 கோடி பேர் வரை வரவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.