வவுனியாவில் ஜனாதிபதியின் இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு போக்குவரத்துச் சேவை ஆரம்பம்!!

396

 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியாக பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு பொதுமக்கள், பாடசாலை மாணவர்களின் நலன் கருதி வவுனியா கிடாச்சூரிக்கான இ.போ. ச. போக்குவரத்துச் சேவையினை பெற்றுத்தருமாறு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு அப்பகுதி மக்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக நேற்று (09.01.2017) பிற்பகல் 1 மணியளவில் வவுனியா கிடாச்சூரி சேவையினை உத்தியோக பூர்வமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோஹன புஸ்பகுமாரவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இ.போ.ச சாலையினால் ஒரு நாளைக்கு மூன்று சேவையினை வவுனியா கிடாச்சூரிக்கு வழங்க உள்ளதாக சாலை முகாமையாளர் டி.எம்.எஸ்.சொய்சா தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், இ.போ. ச சாலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

தற்போது வவுனியா கிடாச்சூரிக்கான சேவையினை தனியார் பேரூந்துக்களே மேற்கொண்டு வருகின்றதுடன் அதில் பெருமளவானவர்கள் பேரூந்திற்கு வெளியேயும் மேலேயும் இருந்து பயணம் செல்வதையும் படத்தில் காணலாம்.