வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் 71மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தகுதி!!

398

அண்மையில் வெளியாகிய க.பொ.த (உயர்தர) பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலத்தில் 71மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தெரிவாகியுள்ளதாக வித்தியாலயத்தின் அதிபர் க.சிவநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வர்த்தகபிரிவில் சாந்தகுமார் கனகேஸ்வரி A2B சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 31வது இடத்தினையும் வேலாயுதம் கிருயா 3A சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 54வது இடத்தினையும் நாகராஜன் நிரோஜன் 2AC சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 57வது இடத்தினையும் கலைப்பிரிவில் தேவராசா சுரேக்கா 2AC சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 49வது இடத்தினையும் மனோராஜ் தட்சாயினி 2AB சித்திகளை பெற்று 52வது இடத்தினையும் அறிவலகன் சந்திரமதி ABC சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 59வது இடத்தினையும் சிவகுமார் சிந்துஜா ABC சித்திகளை பெற்று 51வது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கலைப்பிரிவில் 60மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியதில் 30 மாணவர்கள் சித்தியடைந்ததுடன் வர்த்தக பிரிவில் 43 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியதில் 32மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

103 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இதில் 71மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.