திருமணம் முடிந்த முதல் நாளில் இதையெல்லாம் உங்கள் மனைவியிடம் பேச வேண்டாம்!!

403


மற்றவர்களிடம் பேசும் போது இடம், பொருள், ஏவல் பார்த்து பேசுவது அவசியம், இதுவே பல பிரச்சனைகளை கிளப்பாமல் இருக்கும்.



இதேபோன்று திருமணம் முடிந்த தினத்தன்று உங்கள் துணைவியுடம் பேசக்கூடாத விடயங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

முதல் நாளில் மனைவியிடம் கேட்கக் கூடாத விஷயங்கள்



முதலில் பேசும் போதே தன் துணையிடம் தன்னுடைய அல்லது அவர்களின் பழைய வரலாறுகளை பற்றி கேட்கவோ, கூறவோ கூடாது. ஏனெனில் இது நமது முதல் அனுபவத்தை கெடுக்கும் காரணியாக இருக்கும்.



தன் துணையிடம் முதலில் பேசும் போது, தன்னைப் பற்றிய சுயபுராணம் பேசுவதை தவிர்த்து விட வேண்டும். ஏனெனில் இது நீங்கள் ஒரு சுயநலவாதி, அல்லது சுய தம்பட்டம் அடிப்பவர் போன்ற எண்ணங்களை அவர்களின் மனதில் விதைத்துவிடும்.


புதிதாக வந்த தனது மனைவியிடம், தங்களின் குடும்பத்தை பற்றி பெருமையாக கூறுவது, இது மட்டும் தான் பண்ணணும், இதெல்லாம் செய்யக் கூடாது என பெரிய பட்டியலை கூற வேண்டாம்.

திருமணம் முடிந்த முதல் நாளிலே தனது மனைவியிடம் உடலுறவு பற்றி பேசக் கூடாது. ஏனெனில் உங்கள் மீதான நல்ல பிம்பத்தை உடைப்பதுடன், பெண்களுக்கு அதிக அச்சத்தை ஏற்படுத்தும்.


தங்கள் மனைவியிடம் பணம் அதிகம் இருக்கிறது என்றும் அல்லது பொருளாதார கஷ்டத்தை வெளிப்படுத்துவது இரண்டுமே தவறானது. ஏனெனில் இவை இரண்டுமே எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கும்.

உங்களிடம் இருக்கும் எதிர்மறை எண்ணத்தை தாம்பத்தியத்தின் போது வெளிப்படுத்த வேண்டாம். மேலும் மனைவியிடம் பேசும் உரையாடலில் நீ, நான் என்ற பிரிவினை பேச்சுக்களை தவிர்த்து, நாம் என்ற வார்த்தை மட்டும் பயன்படுத்த வேண்டும்.