ஆண் பெண் குரலுக்கு வித்தியாசம் இருப்பது ஏன் என்று தெரியுமா?

410

மனிதர்களில் ஒருவருடைய குரலானது மற்றொருவரின் குரலோடு 100% பொருந்துவது கிடையாது. இதனால் தான் ஒருவரை அவரின் குரலின் மூலம் அடையாளம் காணமுடிகிறது.

ஆனால் இவ்வுலகில் ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலர்களின் குரல்கள் வித்தியாசமாக இருப்பது ஒரு இயல்பான இயற்கையான விஷயமாக இருந்தாலும் அதற்கு என்ன காரணம் என்று யோசித்தது உண்டா?

ஆண் பெண் குரலுக்கு வித்தியாசம் ஏற்படுவதற்கு என்ன காரணம்?

ஆண்களின் குரலானது, பெண்களின் குரலை விட சற்று தடிமனாகவும் கொஞ்சம் கரகரப்பாகவும் இருக்கும்.

அதுவே பெண்களின் குரல் ஆண் குரலை விட மென்மையாகவும் இனிமையாகவும் இருக்கும். இந்த வித்தியாசத்தின் மூலம் தான் நாம் ஆண் மற்றும் பெண் குரல்களுக்கு இடையே இருக்கும் வித்தியாசங்களைக் கண்டுபிடிக்கின்றோம்.

மனிதர்களின் தொண்டைப் பகுதியில் இருக்கும் குரல்வளையில் கிடைமட்டமாக அமைந்து இருக்கும் குரல்நாண்கள் என்னும் தசைமடிப்புகள் தான் நாம் பேசுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த தசைமடிப்புகள் நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது தளர்ந்த நிலையிலும், நாம் பேச முயற்சிக்கும் போது வீணையில் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் நரம்பைப் போல விறைப்பான நிலையிலும் செயல்படுகிறது.

சாதாரணமாக குரல்நாண் ஆணில் 17.5mm முதல் 25mm வரையிலும், பெண்ணில் 12.5mm – 17.5mm வரை நீளமும் இருக்கும்.

ஆண்களின் குரல்நாண் வளர்ச்சி அதிகரிக்கும் போது, அதன் விறைப்புத்தன்மை குறைந்து விடுகிறது. இதனால் அவர்களின் குரலில் மென்மை குறைந்து ஒருவித கரகரப்புத்தன்மை ஏற்படுகிறது.

எனவே ஆண்களின் குரல்நாண்களை, பெண்களின் குரல்நாண்களோடு ஒப்பிடும் போது, அவை அளவிலும், வளர்ச்சியிலும் குறைவாக இருப்பதால் பெண்ணில் குரல்நாண்கள் விறைப்படைந்து குரலில் மென்மை அதிகமாகி, இனிமை கூடுகிறது.

இதனால் தான் ஆண்கள் குரலில் இருந்து பெண்களின் குரல் முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது.