மகாகவி பாரதியாரின் 98 ஆண்டு பழமையான புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது!!

246

ஆங்கிலேய ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்தவர்களை தனது புரட்சிகரமான கவிதைகளால் தட்டி எழுப்பியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.

தனது தனிச்சிறப்பு வாய்ந்த கட்டுரைகளால் மக்களிடையே விடுதலை வேட்கையைத் தூண்டிய பாரதியாரின் 98 ஆண்டுகால பழமையான புகைப்படம் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

புதுடெல்லியில் கிடைத்த இந்த புகைப்படத்தை சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் பேராசிரியர் மணிகண்டன் நேற்று (16) சென்னையில் நடந்த ஒரு விழாவில் வெளியிட்டுள்ளார்.

முன்னாள் மதராஸ் மாகாணத்தின் விக்டோரியா ஹாலில் 2-3-1919 அன்று நடந்த கருத்தரங்கில் பாரதியார் பேச வந்தபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

தலையில் முண்டாசு கட்டி, முறுக்கு மீசையுடன் கம்பீரமாக தோற்றமளிக்கும் இந்த பழமையான புகைப்படத்தையும் சேர்த்து பாரதியாரின் அசல் புகைப்படங்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.