டொனால்ட் ட்ரம்ப்பின் சிலையை அவமானப்படுத்தி எதிர்ப்பு தெரிவித்த பெண்!!

265

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் மீதான தமது எதிர்ப்பை பெண்கள் அமைப்பு ஒன்று வித்தியாசமாகக் காட்டியுள்ளது.

ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் உள்ள நூதனசாலை ஒன்றில் நேற்று ட்ரம்ப்பின் முழு உருவ மெழுகுச் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட ‘ஃபிமென்’ (FEMEN) என்ற பெண் உரிமைகளுக்கான அமைப்பைச் சார்ந்த பெண்ணொருவர், திடீரென்று பாதுகாப்பு அதிகாரிகளை மீறிக்கொண்டு சிலைக்கருகில் சென்றார்.

சிலைக்கருகே சென்றதும் அவர் தனது மேலாடையைக் கழற்றியெறிந்ததுடன் ட்ரம்ப்பின் சிலையின் மறைவுப் பகுதியைக் கைகளால் பிடித்துக்கொண்டு கீழ்த்தரமான கோஷம் எழுப்பி தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.

பாதுகாப்பு அதிகாரிகள் எவ்வளவோ கூறியும் கேட்காமல் எதிர்ப்பு கோஷம் எழுப்பிய அவரை, இறுதியில் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர்.