பிரித்தானியாவில் வெடிக்காத நிலையில் இரண்டாம் உலகப் போர் குண்டு: அவசரமாக மூடப்பட்ட பாலங்கள்.. அச்சத்தில் மக்கள்!!

338



பிரித்தானியாவின் வாட்டேர்லோ மற்றும் வெஸ்ட் மினிஸ்டர் என இரண்டு முக்கிய பாலங்கள் திடீரென்று பொலிசாரால் மூடப்பட்டுள்ளது.பிரித்தானியாவின் மிகவும் பரபரப்பாக மற்றும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக காணப்படும் Waterloo மற்றும் Westminster பாலங்கள் திடீரென்று பொலிசாரால் மூடப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற பெரும்பாலான பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகினர்.

அதன் வழியாக வந்த அனைத்து வாகனங்கள் சிறப்பு பாதைகள் வழியாக திருப்பி விடப்பட்டன.இது குறித்து பொலிசார் தரப்பில் கூறுகையில், இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், வெடிகுண்டு வெடிக்காமல் இந்த நதியில் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும், அதன் காரணமாகவே இது போன்ற முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.



இதன் காரணமாக சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு பாலங்களும் இன்னும் 3 மணி நேரத்திற்கு திறக்கப்பட்டுவிடும் எனவும், மக்களின் பாதுகாப்புக்காவே இது போன்று மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டு பாலங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்திவருவதாக கூறப்படுகிறது. பிரித்தானியாவில் நாசி ஜேர்மனியின் போர் காலங்களில் ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதலின் போது, தாக்கப்பட்ட வெடிகுண்டுகள் இன்னும் வெடிக்காத நிலையில் அந்நாட்டில் சில இடங்களில் இன்றளவும் கூட கண்டெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.



இது குறித்து பிரித்தானிய மக்கள் தங்கள் டுவிட்டர் பக்கத்தில், Waterloo பாலத்தில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு இன்னும் வெடிக்காத நிலையில் உள்ளதாகவும், அதை 72 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்துள்ளதாகவும் பதிவேற்றம் செய்துள்ளனர்.இதை பற்றி மக்கள் யாரும் கவலைப்படத்தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.மேலும் பாலம் மூடப்பட்டது பெரிதும் கஷ்டமாக இருப்பதாகவும், போக்குவரத்தால் பிரித்தானியா ஸ்தம்பித்து போகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளன.