நிஜ ஹீரோக்களை உலகுக்கு காட்டிய மெரினா!!

292


 
தமிழகத்தில் ஜல்லிகட்டு நடைபெற வேண்டும், பீட்டா அமைப்பிற்கு தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தன்னெழுச்சி போராட்டமாக வெடித்துள்ளது.

இந்த போராட்டத்தில் பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.



இரவு, பகலாக பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தங்களின் கலாச்சாரம், பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு போராடி வருகிறார்கள்.

இவர்கள் வெறும் பொழுபோக்கிற்காக சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் என்று எண்ணியவர்களின் நம்பிக்கையை உடைத்தெறிந்து புதிய சகாப்தத்தை படைத்துள்ளனர். பெண்களின் பாதுகாப்பாக இளைஞர்கள் விளங்கி வருகின்றனர்.



ஜல்லிக்கட்டுக்காக போராடத் துடிக்கும் ஒவ்வொருவரும் அங்கு குழுமியிருக்கின்றனர். லட்சக்கணக்கானோர் திரண்ட இந்த போராட்டக்குழுவில் பலருக்கு முன் அறிமுகம் கிடையாது.



போராட்டக் களத்திலேயே ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொண்டு அமைதியான வழியில் போராட்டம் சென்று கொண்டு இருக்கிறது.


ஆண், பெண் என்ற பேதமில்லை. அனைவரும் ஒற்றுமையுடன் ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்து வருகின்றனர்.