ஐபோன் விற்பனையில் சாதனை படைத்த அப்பிள் நிறுவனம்!!

320


முன்னணி நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் தமது வருவாயை காலாண்டு அடிப்படையில் வெளியிடுவது வழக்கமாகும். அதேபோன்று தாம் விற்பனை செய்த பொருட்களின் எண்ணிக்கையை அறிக்கைப்படுத்துவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளன.



இதே போன்று அப்பிள் நிறுவனம் கடந்த வருடத்தின் நான்காம் காலாண்டில் விற்பனை செய்த ஐபோன்களின் எண்ணிக்கை தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி சுமார் 78.3 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது 2015ம் வருடத்தின் நான்காம் காலாண்டுப் பகுதியில் விற்பனை செய்ததை விட சற்று அதிகமாகும்.



இதேவேளை சாம்சுங் நிறுவனத்துடன் ஒப்பிடுகையில் அப்பிள் நிறுவனம் முன்னணியில் திகழ்கின்றது.



காரணம் 2015ம் ஆண்டில் இதே காலாண்டுப் பகுதியில் 81.3 மில்லியன் ஸ்மார்ட் கைப்பேசிகளை விற்பனை செய்திருந்த சாம்சுங் நிறுவனம், 2016ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் 77.5 மில்லியன் கைப்பேசிகளையே விற்பனை செய்துள்ளது.


இது அப்பிள் நிறுவனம் 2016ம் ஆண்டு 4ம் காலாண்டில் விற்பனை செய்த கைப்பேசிகளின் எண்ணிக்கையிலும் குறைவாகும்.

அத்துடன் சம்சுங் நிறுவனத்தின் விற்பனையும் 2015ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016ம் ஆண்டு வீழ்ச்சியடைந்துள்ளது.