சிரியா அகதிக்கு ஆயுள் தண்டனை விதித்த ஸ்வீடன் : அதிர வைக்கும் காரணம்!!

241


ஸ்வீடனில் சிரியா அகதி ஒருவர் கூட்டு படுகொலையில் ஈடுபட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



ஸ்வீடனில் கடந்த 2012 ஆம் ஆண்டு சிரியா அகதியான Haisam Omar Sakhanh (46) என்பவர் அங்குள்ள ஆயுதப்படை போராளி குழு ஒன்றில் இணைந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குறித்த ஆயுதப்படை குழுவானது கூட்டு படுகொலை ஒன்றில் ஈடுபட்டுள்ளது. அதில் தற்போது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சிரியா அகதி Sakhanh நபர் ஒருவரை சுட்டுக்கொன்றுள்ளார்.



இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் Sakhanh தரப்பு வாதங்களை Stockholm மாவட்ட நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது. இதனையடுத்து குறித்த நபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி Stockholm மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



மட்டுமின்றி தண்டனைக்காலம் முடிவடைந்ததும் ஸ்வீடனில் இருந்து நாடுகடத்தவும், மீண்டும் எக்காரணம் கொண்டும் ஸ்வீடனுக்குள் நுழையாத வகையில் தடை செய்யவும் அரசு முனைப்பு காட்டி வருகின்றது.


கடந்த 2011-12 ஆண்டுகளில் இத்தாலில் குடியிருந்த Sakhanh சிரியா அரசுக்கு எதிராக முனைப்புடன் போராடி வந்துள்ளார். தொடர்ந்து அங்கிருந்து சிரியாவுக்கு திரும்பிய Sakhanh 2013 ஆம் ஆண்டு ஸ்வீடன் அரசிடம் புகலிடம் கோரியுள்ளார்.

ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு வரை இவரது கடந்த காலம் குறித்து ஸ்வீடன் அதிகாரிகளிடம் எதையும் வெளிப்படுத்தாமல் மறைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவருக்கு நிரந்தர குடியுரிமை அளித்துள்ளது ஸ்வீடன் அரசு.


இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு நடந்த கூட்டு படுகொலையின் காணொளி ஆதாரம் வெளியாக 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி விசாரணை கைதியாக சிறை வைக்கப்பட்டார் Sakhanh.

ஸ்வீடனில் ஆயுள் தண்டனை என்பது 10 ஆண்டுகள் மட்டுமே என்பதால், தண்டனை முடிவடைந்ததும் அவரை நாடுகடத்த வேண்டும் என Stockholm மாவட்ட நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.