தமிழ் இளம் பெண் சோபிகாவை கொன்ற அகதி சுவிசில் கைது : காரணம் என்ன தெரியுமா?

225

 

ஜேர்மனில் கரித்தாஸ் தொண்டு நிறுவனத்தில் தன்னார்வ தொண்டராக பணியாற்றிய தமிழ் யுவதி பரமநாதன் சோபிதா (வயது 22) படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டு நைஜீய நாட்டு புகலிட கோரிக்கையாளரான 27 வயது இளைஞன் ஒருவர் சுவிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை கைது செய்ய ஐரோப்பிய நாடுகளுக்கான பிடியாணை ஜேர்மனியால் பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் ரயில் நிலையம் ஒன்றுக்கு அருகில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை கைது இடம்பெற்றது.

இவரை நீதிமன்ற விசாரணைக்காக கையளிக்க வேண்டும் என்று ஜேர்மனிய அதிகாரிகள் கோரி உள்ளனர்.

ஒருதலை காதலே படுகொலைக்கு காரணம் என்று கூறப்படுகின்றது. காதலனிடம் இருந்து அண்மையில்தான் சோபிதா பிரிந்தார். இன்னொருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்த கூடிய மனநிலையில் இவர் இருந்திருக்கவில்லை.

ஆனால் நைஜீரிய இளைஞன் தொடர்ச்சியாக காதலை வெளிப்படுத்தி வந்திருக்கின்றார். கடந்த வலண்டைன் தினத்துக்கு முந்திய நாட்களில் மிக தீவிரமாக நடந்து கொண்டார். ஆயினும் சோபிதா இவரின் காதலை இத்தடவைகளிலும் நிராகரித்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞன் கடந்த சனிக்கிழமை கத்தியால் சோபிதாவின் தலை, கழுத்து, மார்பகங்களில் மாறி மாறி குத்தி படுகொலை செய்து உள்ளார்.