ஜேர்மனியில் டிஜிட்டல் பொம்மைகளுக்கு தடை!!

248

ஜேர்மனியில் சிறுவர்கள் அதிகம் பயன்படுத்தும் இணைய தொடர்புள்ள டிஜிட்டல் பொம்மைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனி நாட்டில் My Friend Cayla என்னும் பொம்மை சிறுவர், சிறுமிகளிடம் மிக பிரபலமாகும்.

இந்த பொம்மை மூலமாக ஏதாவது கேள்வி கேட்டால் அது இணைய உதவியுடன் ஆப்ஸ் உடன் இணைத்து கொண்டு கேள்விக்கான பதிலை சொல்லும்.

பெற்றோர்களுக்கு தெரியாமல் குழந்தைகள் எது பேசினாலும் இதில் பதிவாகிவிடும். இதை வேறு தவறான வழியில் கூட பயன்படுத்த முடியும்.

இதை கருத்தில் கொண்டும், இது ரகசிய உளவுகள் தரும் சாதனமாகவும் திகழ்வதால் இந்த வகையான பொம்மைகளை தடை செய்ய ஜேர்மனியின் மத்திய நெட்வொர்க் ஏஜென்சி உத்தரவிட்டுள்ளது.

இதுபோலவே செயல்படும் வேறு பொம்மைகளையும் தடை செய்யவும் தயங்க மாட்டோம் என அந்த ஏஜன்சி கூறியுள்ளது.

இந்த தடை உத்தரவுக்கு ஐரோப்பிய நுகர்வோர் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.