சுவிஸ் சொலத்தூர்ன் மாநில தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர்!!

202

புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளின் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் ஆளுமைகளாக மாறி வருகின்றனர்.

உலகெங்கிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றம் வரை இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் சுவிஸில் எதிர்வரும் மார்ச் 12ம் திகதி சொலத்தூர்ன் மாநில தேர்தல் இடம்பெறவுள்ளது.

இந்த தேர்தலில் சோஷலிச ஜனநாயக கட்சியின் சார்பில் சொலத்தூர்ன் மாநில OLTEN-GÖSGEN தொகுதியில் தொழிலதிபர் ஸ்ரீஸ்கந்தராஜா இராசமாணிக்கம் போட்டியிடுகிறார்.

ஈழத் தமிழர்களுக்காகவும், புலம் பெயர்ந்து வாழும் ஏனைய வெளிநாட்டினருக்காகவும் நீண்ட காலமாக சோஷலிச ஜன நாயக கட்சியுடன் இணைந்து ஸ்ரீஸ்கந்தராஜா இராசமாணிக்கம் குரல் கொடுத்து வருகிறார்.

ஸ்ரீஸ்கந்தராஜா ஈழத்தமிழர்கள் சார்பில் அரசியலில் ஈடுபடும் அனைவரும் அறிந்த, அதே நேரம் சுவிஸ் அரசியலில் ஈடுபடும் இளைய தலைமுறையினருக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்து வருவர் என்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இவரின் அரசியல் பிரவேசத்தின் குறிக்கோள் புலம் பெயர்ந்த வெளிநாட்டு மக்களின் கல்வி, பொருளாதாரம், பாதுகாப்பு, காலை கலாசார மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படல்.

அடுத்த தலைமுறை அரசியலில் பிரவேசிக்க நாம் அதற்கான அடித்தளத்தை இடவேண்டும் இதுவே தனது முக்கிய குறிக்கோள் என்ற கருத்தை அவர் பல இடங்களில் பதிவு செய்துள்ளார்.

அதற்கேற்ப வெளிநாட்டினர் பிரஜாவுரிமை பெற்றிருந்தாலும் குற்றங்கள் புரிந்திருப்பின் அவர்களை நாடு கடத்தவேண்டும் என்று கொண்டுவரப்பட்ட சட்டத்தை சோஷலிச ஜனநாயக கட்சியின் சார்பில் கடுமையாக எதிர்த்து பிரசாரம் செய்தமையும், அந்த சட்டத்தை சுவிஸ் மக்கள் ஆதரிக்காமையால் வர இருந்த ஆபத்து தடுக்கப்பட்டததையும் சுட்டிக்காட்டலாம்.

அத்தோடு அண்மையில் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைகள், அதாவது அடுத்த தலைமுறையினர் சுவிஸில் பிறந்தால் அவர்களுக்கு சுவிஸ் பிரஜாவுரிமை கிடைக்கவேண்டும்.

சோஷலிச ஜனநாயக கட்சியின் கோரிக்கை வெற்றிபெற்றதும் அதிலும் ஸ்ரீஸ்கந்தராஜா முனைப்புடன் செயல்பட்டார் என்பதையும் குறிப்பிடலாம்.

எனவே சொலத்தூர்ன் மாநிலத்தில் OLTEN-GÖSGEN தொகுதியில் போட்டியிடும் ஸ்ரீஸ்கந்தராஜா இராசமாணிக்கம் அவர்கள் வெற்றிபெற வாக்களிப்போம்.

வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்ற சுவிஸ் பிரஜைகளுக்காக அல்லது அகதிகளுக்காக குரல் கொடுக்கும் சோஷலிச ஜனநாயக கட்சியில் அனைவரிடமும் நன்மதிப்பை பெற்ற, நம் தமிழ் உறவான இவரின் முயற்சிக்கு துணை நிப்போம்.

சொலத்தூர்ன் மாநிலத்தில் வசிக்கும் தாய்த்தமிழ் உறவுகள் உங்கள் நண்பர்கள் மற்றும் அயலவர்களிடம் இந்த செய்தியை கொண்டு சென்று அவரின் வெற்றிக்கு வழிவகை செய்வோம்.

ஒருவர் இரண்டு வாக்குகள் அளிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். சோஷலிச ஜனநாயக கட்சி-SP LISTE-3 க்கு வாக்களித்து தமிழர் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவோம்.