48 பந்துகளில் கடைசி 7 விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா!!

276

முதல் இன்னிங்சில், அவுஸ்திரேலிய அணி 260 ஓட்டங்களை பெற்ற நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்சில் கடைசி 48 பந்துகளில் 7 விக்கெட்டுகளை இழந்தது.

அடுத்து துடுப்பெடுத்தாடிய இந்தியா 105 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது.

இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் புனேயில் நேற்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்த்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.

அந்த அணி முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்கி ஆடியது.

40.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் எடுத்தது. அதிலும் கடைசி 48 பந்துகளில் 7 விக்கெட்டுகளை இழந்து மோசமான வீழ்ச்சியை சந்தித்தது இந்தியா

தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா அணி இன்றைய 2 ஆம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.