சொந்த நாட்டில் படுதோல்வியடைந்த இந்திய அணி!!

271


புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.



இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இதில் முதல் போட்டி கடந்த 23ம் திகதி புனேவில் ஆரம்பமானது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து, இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 441 ஓட்டங்களை நிர்ணயித்தது.



இன்னும் இரண்டு நாட்கள் மீதம் உள்ள நிலையில் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மைதானத்தில் நடந்தது வேறு.



கடின இலக்கை துரத்திய இந்திய அணி, அவுஸ்திரேலிய அணியின் அசத்தல் சுழலில் மீண்டும் ஆட்டம் கண்டது. ஆரம்பம் முதல் தடுமாறிய இந்திய அணிக்கு முரளி விஜய் (2), ராகுல் (10) துவக்கத்திலேயே இருந்த இரண்டு ரிவியூவையும் வீணடித்தனர்.


பின் வந்த கோஹ்லி (13) ஸ்டீவ் ஓ கெபி பந்தை தவறாக கணித்தால், போல்டானார். அடுத்து வந்த ரகானே (18), அஷ்வின் (8), சகா (3), புஜாரா (31), ரவிந்திர ஜடேஜா (3) என ஒ கெபி சுழலை தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறினர்.

இதையடுத்து இந்திய அணி, இரண்டாவது இன்னிங்சில் 107 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது


மேலும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் அவுஸ்திரேலிய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் கீபே தெரிவு செய்யப்பட்டார். இவர் இரண்டு இன்னிங்சிலும் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.