மொபைல் போன் கதிர்வீச்சிலிருந்து பாதுகாத்து கொள்ள செய்ய வேண்டியவை!!

419


உலக அளவில் 400 கோடிக்கும் அதிகமானோர் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர்.



2011ம் ஆண்டு உலக புற்றுநோய் கழகம் மேற்கொண்ட ஆய்வில் மொபைல் கதிர்வீச்சின் மின்காந்த அலைகள் புற்றுநோய்க்கு காரணமாக அமையலாம் என கண்டறியப்பட்டுள்ளது.

மொபைல்போனில் இருந்து வெளியிடப்படும் கதிர்வீச்சினால் புற்றுநோய் மட்டுமல்லாமல் தலைவலி, உடல்சோர்வு, உடல் சிதைவில் தொடங்கி புற்றுநோய் கட்டிகள் வரை பாதிப்பு ஏற்படலாம் என எலக்ட்ரோமேக்னடிக் பயாலஜி மற்றும் மருந்துகள் இதழ்(Electromagnetic Biology and Medicine Journal) மேற்கொண்ட ஆய்வில் அறியப்பட்டுள்ளது.



மொபைல் போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சினை உள்வாங்கும் அளவினை ஸ்பெசிபிக் அப்சார்ப்சன் ரேட்(Specific absorption Rate) எனக் கூறுவர்.



ஒரு கிராமுக்கு 1.6வாட்ஸ் என்ற அளவினை விட குறைவாக இருக்க வேண்டும் என கட்டுப்பாடு உள்ளது.


ஸ்மார்ட் மொபைல் போனில் *07# என்ற எண்ணை டயல் செய்யும் போது 1.6என்ற அளவினை விட குறைவாக இருந்தால் அந்த போனானது பாதுகாப்பானது.

கதிர்வீச்சிலிருந்து பாதுகாத்து கொள்ள


சிக்னல் குறைவாக உள்ள இடங்களில் அதிகளவு கதிர்வீச்சினை மொபைல்போன் வெளிப்படுத்துவதனால் சிக்னல் குறைவாக உள்ள இடங்களில் மொபைல்போன் பயன்பாட்டினை தவிர்க்கலாம்.
சார்ஜ் 15 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள போதும், மொபைல் சார்ஜ் போடும் போதும் கதிர்வீச்சானது அதிகமாக இருக்கும். இந்த நேரங்களில் போன் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

அதிக நேரம் போனை காதில் வைத்து பேசும் போது கதிர்வீச்சின் அளவானது அதிகரித்து எளிதாக மூளையினை நேரடியாக பாதிக்கும் அபாயமுள்ளது. எனவே, ஹேண்ட் ஃப்ரீ மோட் (Hand free mode) அல்லது இயர் போன் (Earphone) பயன்படுத்தலாம்.

அன்றாடம் பயன்படுத்தும் டி.வி. மற்றும் ரேடியோக்களில் இருந்து குறைந்தபட்சம் 20 செ.மீ. தொலைவு இடைவெளியில் இருப்பதால் அதில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சில் இருந்து நம்மை பாதுகாத்துத் கொள்ளலாம்.

தூங்கும் போது தலையணை கீழ் அல்லது தலைக்கு அருகில் மொபைல் போனினை வைப்பதனை தவிர்க்க வேண்டும்.


கதிர்வீச்சின் அளவு குழந்தைகளுக்கு இரு மடங்காக இருக்கும் என்பதால், குழந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

தோலில் கதிர்வீச்சு உருவாவதை தடுக்கும் ரேடியேசன் டிபெண்டர் கேஸ்களை பயன்படுத்துவதால் கதிர்வீச்சு பாதிப்பினை சற்று கட்டுப்படுத்தலாம்.

அதிகமாக சூடாகும் பேட்டரி கொண்ட ஸ்மார்ட் போன்களை தவிர்க்கவேண்டும்