வட்ஸ் அப் பயனாளர்களுக்கு சிக்கல்!!

360

தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக, என்க்ரிப்ஷன் தொழிநுட்ப வசதியை கொண்டுள்ள செயலியின் தரவுகளை, என்க்ரிப்ஷன் வசதியை கொண்டே ஊடுறுவ முடியுமெனவும், அதனால் 100 மில்லியன் வட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் பாவனையாளர்கள் பாதிப்படையும் ஆபத்துள்ளதாக செக் பாயிண்ட் மென்பொருள் தொழிநுட்பவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வட்ஸ் அப் செயலியின், கணினி பதிப்புகளில் ஏற்பட்டுள்ள பிழைகள் காரணமாக 100 மில்லியனுக்கும் அதிகமான வட்ஸ்அப் பாவனையாளர்களை பாதிக்குமெனவும், குறித்த புதிய பிழை காரணமாக பெரும்பாலான வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் பயனாளர்களின் தரவுகளை ஊடுருவும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊடுருவலில் ஈடுபடும் விஷமிகள் மூலம், ஒரே வகையான படத்தை அனுப்பி, கணக்குகளை முழுமையாக இயக்க முடியும். அத்தோடு பாவனையாளர்களின் தகவல் பரிமாற்றுக்களை இயக்கக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளதாக செக் பாயிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பிழையை கொண்டு டிஜிட்டல் புகைப்படங்கள் மூலம் அனுப்பப்படும் இரகசிய குறியீடுகளை கொண்டு, பாவனையாளர்களின் செயலியை முழுமையாக இயக்க முடியும் என்பதோடு, அவர்களின் தொடர்புகள் உள்ளிட்ட தரவுகளை களவாடும் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரேலிய தொழிநுட்ப நிறுவனமான செக் பாயிண்ட் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.