பங்களாதேஷ் டெஸ்ட் வரலாற்றில் பொன்னான நாள் : தோல்வியைத் தழுவியது இலங்கை!!

276

 
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கட்டுக்களால் வெற்றிபெற்று பங்களாதேஷ் அணி தனது வரலாற்று டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இன்று நிறைவுக்கு வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி பங்களாதேஷ் அணிக்கு நூறாவது போட்டியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இன்னிங்சில் 191 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கில் விளையாடிய பங்களாதேஷ் அணி 4 விக்கட்டுகளால் இலங்கையினை வீழ்த்தி தனது வரலாற்றில் இந்த டெஸ்ட் போட்டியினை பதிவுசெய்தது.

இதற்கு முன்னர் ஒருபோதும் பங்களாதேஷ் அணி டெஸ்ட் போட்டியொன்றில் இலங்கையை அணியினை வெற்றிகொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணியின் பிரதான மற்றும் துடுப்பாட்ட பயிற்சியாளர்களாக இலங்கை வீரர்களாக சந்திக ஹத்துருசிங்க மற்றும் திலான் சமரவீர ஆகியோர் செயற்படுகின்றனர்.

நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மாணித்து களமிறங்கியது. அதன்படி முதல் இன்னிங்சில் இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றது.அதற்கு பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 467 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தனது இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை அணியினை பங்களாதேஷின் பந்து வீச்சாளர்கள் தடுமாற செய்ய சகல விக்கட்டுகளையும் இழந்து 319 ஓட்டங்களை பெற்று கொண்டது. இதில் இலங்கை அணி சார்பாக கருணாரத்ன 126 ஓட்டங்களை பெற்றுகொடுத்தார்.

இதன்படி 191 என்ற வெற்றியிலக்கை நோக்கி கடைசி நாளான இன்று களமிறங்கிய பங்களாதேஷ் அணியின் தமிம் இக்பாலின் 82 ஓட்டங்களினால் பலமடைந்து 6 விக்கட்டுக்களை இழந்து தனது வரலாற்று போட்டியில் வரலாற்று சாதனையினை படைத்துள்ளமை பங்களாதேஷ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த போட்டியில் பங்களாதேஷ் அடைந்த வெற்றியினால் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரினை 1-1 என பங்களாதேஷ் அணி சமநிலை செய்துள்ளது.போட்டியின் ஆட்டநாயகனாக பங்களாதேஷ் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பால் தெரிவுசெய்யப்பட்டார்.


Sri Lankan Test captain Rangana Herath (L) and Bangladesh Test captain Mushfiqur Rahim pose for photographers with the series trophy after Bangladesh’s victory over Sri Lanka by four wickets on the fifth and final day of the second and final Test cricket match between Sri Lanka and Bangladesh at The P. Sara Oval Cricket Stadium in Colombo on March 19, 2017.
The rare win, Bangladeshs only fourth away from home and first ever against Sri Lanka in 18 attempts, helped them finish the two-Test series 1-1 after a 259-run loss in the opening Test in Galle. / AFP PHOTO / Ishara S. KODIKARA (Photo credit should read ISHARA S. KODIKARA/AFP/Getty Images)